

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் தடை செய் யப்பட்டுள்ள ராட்டினங்களை மீண்டும் அனுமதிக்கக்கோரி மேயரிடம் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள வெலிங்டன் சீமாட்டி கல்லூரி வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பு தனியார் பொருட்காட்சி நடத்தப்பட்டது. அப்போது, ராட்சத ராட்டினத்தில் சுற்றிய பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந் தார். இதையடுத்து, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் ராட்டினம் இயக்க மாநகராட்சி தடை விதித்தது.
இந்நிலையில், சென்னை கடற் கரையில் ராட்டினங்களை மீண்டும் அனுமதிக்கக் கோரி அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சைதை துரைசாமியை நேற்று நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
தொழிலாளி பன்னீர்செல்வம் இதுபற்றி கூறும்போது, ‘‘பொருட் காட்சிக்காக வைக்கப்பட்ட ராட்டினத்தில் விபத்து நடந் தது. அதுபோன்ற பெரிய ராட்டினங் களில்தான் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. கடற்கரையில் பெரும் பாலான ராட்டினங்கள் சிறியவை. அதில் இருந்து கீழே விழுந்து அடிபட வாய்ப்பு இல்லை. தொழில் இல்லாததால் மெரி னாவில் 140 ராட்டினத் தொழி லாளர்கள், பெசன்ட் நகரில் 50 ராட்டினத் தொழிலாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளோம்’’ என்றார்.
அவர்களது மனுக்களை மேயர் ஏற்றுக்கொண்டார். ‘பல ராட்டி னங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக இல்லை என்று கூறப்பட்டதாலேயே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறிய மேயர், அவர்களது ராட்டினங்கள் தொடர்பான ஆவணங்களைக் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.