Published : 09 Jan 2021 03:44 PM
Last Updated : 09 Jan 2021 03:44 PM

11 வழிகாட்டுக் குழு உறுப்பினர்கள் தேர்வு: அதிமுக பொதுக்குழு அங்கீகரித்து தீர்மானம் 

11 உறுப்பினர்கள் கொண்ட வழிகாட்டுக் குழுவை அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் முறையாக அங்கீகரித்துள்ளது.

சென்னையில் இன்று அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் 11 உறுப்பினர்கள் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு அங்கீகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக 11 பேர் கடந்த புதிதாக 7.10.2020 அன்று நியமிக்கப்பட்டனர். இந்த வழிகாட்டுக் குழுவிற்கு ஒப்புதலையும், அங்கீகாரத்தையும் இப்பொதுக்குழு இன்று அளித்தது.

வழிகாட்டுக் குழுவின் உறுப்பினர்கள்

1. திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர், வனத்துறை அமைச்சர்.

2. பி. தங்கமணி, அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்டச் செயலாளர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர்

3. எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்.

4. ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர்.

5. சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்டச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர்.

6. காமராஜ், திருவாரூர் மாவட்டச் செயலாளர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்.

7. ஜே.சி.டி.பிரபாகர், அமைப்புச் செயலாளர், அதிமுக செய்தித் தொடர்பாளர்.

8. மனோஜ் பாண்டியன், அமைப்புச் செயலாளர்.

9. ப.மோகன், அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

10. கோபாலகிருஷ்ணன், தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்.

11. கி.மாணிக்கம், சோழவந்தான் எம்எல்ஏ.

இந்தக் குழுவில் எப்பொழுதும் மொத்தம் 11 உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

வழிகாட்டுக் குழுவின் பணிகள்

* அதிமுகவின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்குதல்.

* கட்சியின் கொள்கை, நிலைப்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளையும், கருத்துகளையும், பரிந்துரைகளையும் வழங்குதல்.

* இந்தக் குழுவின் உறுப்பினர்களைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து நியமிப்பார்கள். இந்த உறுப்பினர்களை நீக்குகின்ற அதிகாரம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்படுகின்றது.

* இந்த வழிகாட்டுக் குழுவிற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள், நியமன அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் பொறுப்பில் இருப்பார்கள்.

* ஒருமுறை இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள், மீண்டும் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட எவ்விதத் தடையும் இல்லை.

கழக சட்ட திட்ட விதி: 20-ன் கீழ் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும், வழிகாட்டுக் குழு உறுப்பினர்களின் நியமனம் மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றையும், இப்பொதுக்குழு ஏற்று, ஒருமனதாக அங்கீகரிக்கிறது.

இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x