

மதுரை மாவட்டத்தில் தொடர் கன மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மதுரை அருகே இடையபட்டியில் 55 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்து வரு கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குளங்கள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. வைகை ஆற்றில் ஓரளவு தண்ணீர் செல்கிறது. மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதி களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை நீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தெப்பம்போல் தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் வீடு களைவிட்டு வெளியே சென்றுவர சிரமப்படுகின்றனர்.
நேற்று பதிவான மழை அளவு (மி.மீ.ல்) வருமாறு:
சிட்டம்பட்டி-52.20, திருமங்கலம்-27, கள்ளந்திரி-47, சாத்தையாறு-16, மேலூர்-34, வாடிப்பட்டி-31, மதுரை விமான நிலையம்-23., இடைய பட்டி-55, சோழவந்தான்-26.