

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் கணினி பயிற்றுநர், தொழிற்கல்வி வேளாண்மை பயிற்றுநர் ஆகியோருக்கு இந்த ஆண்டு முதல்முறையாக கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கணினி ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு அக்டோபர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பங்கள் 16, 17-ம் தேதிகளில் பரிசீலிக்கப்படும். அதேபோல், விவசாய ஆசிரியர்களும் இடமாறுதலுக்கு 15-ம் தேதி விண்ணப்பிக்கலாம். அவர்களின் மனுக்கள் 19, 20-ம் தேதிகளில் பரிசீலிக்கப்படும். கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும். கணினி, விவசாய ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவர்களுக்கான கலந்தாய்வினை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நிலையிலேயே நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.