பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துக: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்
ராமதாஸ்: கோப்புப்படம்
Updated on
1 min read

பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக 2013ஆம் ஆண்டில் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜன. 08) வெளியிட்ட தன் ட்விட்டர் பக்கத்தில், "நாகை மாவட்டம் நாகூர் நாகத்தோப்பு என்ற இடத்தில் கூலி வேலைக்குச் சென்று திரும்பிய இளம்பெண்ணை இரு இளைஞர்கள் கோயிலுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மனித நேயமற்ற மிருகத்தனமான இந்தச் செயலைச் செய்த மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மனித மிருகங்களுக்குத் துணை போனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தரமான சிகிச்சை வழங்க வேண்டும்!

பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக 2013ஆம் ஆண்டில் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் பெண்கள் பாதுகாப்பாக நடமாடுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in