Published : 08 Jan 2021 13:26 pm

Updated : 08 Jan 2021 13:26 pm

 

Published : 08 Jan 2021 01:26 PM
Last Updated : 08 Jan 2021 01:26 PM

திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உருவாக்கம்: துரைமுருகன் அறிவிப்பு

duraimurugan-announces-nri-wing
துரைமுருகன்: கோப்புப்படம்

சென்னை

வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி என்ற புதிய அணி திமுகவில் உருவாக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, துரைமுருகன் இன்று (ஜன. 08) வெளியிட்டுள்ள அறிவிப்பு:


"திமுக சட்டதிட்ட விதி: 6, பிரிவு: 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும், திமுக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் திமுக சட்டதிட்ட விதி 31 - பிரிவு: 20-ன் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) நல அணி என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது.

அணிச் செயலாளர்: டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏ

இணைச் செயலாளர்கள்: செந்தில்குமார், எம்.பி.,

புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்".

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


தவறவிடாதீர்!

துரைமுருகன்திமுகவெளிநாடு வாழ் இந்தியர் நல அணிதிமுக தலைமைக்கழகம்டி.ஆர்.பி.ராஜாDuraimuruganDMKNRI wingONE MINUTE NEWSPOLITICS

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x