Published : 08 Jan 2021 01:17 PM
Last Updated : 08 Jan 2021 01:17 PM

'மாஸ்டர்' படத்தை 400 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிடத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

'மாஸ்டர்' படத்தில் விஜய்.

சென்னை

'மாஸ்டர்’ திரைப்படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தைத் தயாரித்துள்ள 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம்' (seven screen studio) சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம் சட்டவிரோதமான இணையதளங்களில் 'மாஸ்டர்' படத்தை வெளியிட்டால் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும், இந்தப் படத்தைச் சட்டவிரோத இணையதளங்களில் வெளியிடக் கூடாது என்றும் வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 400 சட்டவிரோத இணையதளங்களில் 'மாஸ்டர்' திரைப்படத்தை வெளியிடத் தடைவிதித்து 29 இணையதளச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x