செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு தொடர்கிறது

செம்பரம்பாக்கம் ஏரியின் 2 மதகுகள் வழியாக 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் 2 மதகுகள் வழியாக 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Updated on
1 min read

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கன மழை காரணமாக கடந்த வாரத்தில் மீண்டும்உபரிநீர் திறக்கப்பட்டது. முதல்கட்டமாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல்மழை இல்லாத காரணத்தால் நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக பெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகள் ஏற்கெனவே நிரம்பிவிட்ட நிலையில் தற்போது பெய்துவரும் மழை நீரை அப்படியே ஏரிகளில் இருந்து வெளியேற்றி வருவதாலும், கூடுதலாக நேமம் ஏரி தற்போது நிறைந்து அங்கிருந்தும் உபரிநீர் வந்து கொண்டிருப்பதாலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது 3 ஆயிரம் கன அடியாக உள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் 2 மதகுகள் வழியாக 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரிநீர் வெளியேற்றம் காரணமாக குன்றத்தூர் - பெரும்புதூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பூண்டி ஏரியிலிருந்து கடந்த27-ம் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை விநாடிக்கு2,997 கன அடியாக இருந்த உபரிநீர் திறப்பு, மாலை விநாடிக்கு 1,841 கன அடியாக குறைக்கப்பட்டது.

புழல் ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வந்தஉபரிநீர் நேற்று முன்தினம் பகலில் நிறுத்தப்பட்டது. பிறகு, நேற்று முன்தினம் மழைபெய்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்றுமாலை முதல் விநாடிக்கு 480 கன அடிஉபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in