கள்ளக்குறிச்சியில் கனமழை மணிமுக்தா ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி வெளியேற்றம்: 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மணிமுக்தா அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நேற்று விருத்தாசலத்தில் இரு கரைகளையும் தொட்டபடி செல்லும் வெள்ள நீர்.
மணிமுக்தா அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நேற்று விருத்தாசலத்தில் இரு கரைகளையும் தொட்டபடி செல்லும் வெள்ள நீர்.
Updated on
1 min read

கனமழையால் மணிமுக்தா அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.விருத் தாசலம் மணி முக்தா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியதை அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்துவரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த மழையினால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகள்நிரம்பியுள்ளன.சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் சராசரியாக 13 செ.மீ மழைபதிவாகியுள்ளது.இதில் மணி முக்தா அணைப் பகுதியில் 13.4 செ.மீ, கோமுகி அணைப்பகுதியில் 11.6 செ.மீ, கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் 15.செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கச்சிராயப்பாளை யத்தில் உள்ள கோமுகி அணையும் முழுக்கொள்ளளவை எட்டியதால் 2,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மணிமுக்தா அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடிதண்ணீர் திறந்துவிடப் பட்டுள் ளது. இதனால் விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கம்மாபுரம், சொட்டவனம், மேமாத்தூர், ஆதனூர் உட்பட 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து விளைநிலப் பகுதிகளில் புகுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in