Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

நாம் எதையும் செய்ய வேண்டாம் திமுகவை அழிக்க ஸ்டாலின் போதும்: பண்ருட்டியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

பண்ருட்டியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசும் அமைச்சர் சி.வி.சண்முகம்.

விருத்தாசலம்

திமுகவை அழிக்க ஸ்டாலினே போதும். நாம் எதையும் செய்ய வேண்டாம் என பண்ருட்டியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று பண்ருட்டியில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மகளிரணி அணி துணைச் செயலாளரும், பண்ருட்டி சட்டப்பேரவைஉறுப்பினருமான சத்யாபன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.

அதிமுக வடக்கு மண்டல பொறுப்பாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியது:

எம்ஜிஆர், ஜெயலலிதா என்றமிகப்பெரிய ஆளுமை இல்லாதநிலையில் தேர்தலை சந்திக்கி றோம். எனவே இத்தேர்தல் நமக்குமிக முக்கியமான தேர்தல். தேர்தல்நேரத்தில் கட்சி நிர்வாகிகளுக் கிடையே நிலவும் கருத்து வேறு பாடுகளை ஒத்திவைத்து விட்டு தேர்தல் பணியாற்றினால் தான் வெற்றி பெற முடியும். ஜனநாயகக் கட்சியில் கட்சியினருக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். கருத்துவேறுபாட்டை சற்றுதள்ளிவைத்து தேர்தல் பணியில் ஒற்றுமையாக செயல்பட வேண் டிய தருணம்.

அதிமுகவில் மட்டுமே தொண் டர்கள் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். ஏனெனில் இது தொண்டர்களால் வழிநடத்தப்படும் கட்சி. இதுவரை தலைவர்கள் வேண்டுமானால் அங்குமிங்கும் இடமாறி கட்சிக்குத் துரோகம் இழைத்திருக்கலாம். ஆனால் தொண்டர்கள் எங்கும் செல்ல வில்லை. கட்சியில் உள்ள மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு, அவர்களை ஊக்கப்படுத் துங்கள். அவர்கள் தான் கட்சியை வழிநடத்திச் செல்லவேண்டி யவர்கள். ஒவ்வொரு அணியி னரும், எதிரணியின் வியூகம் பார்த்து செயல்படவேண்டும்.

திமுக குடும்பக் கட்சி. அக்கட்சியில் தொண்டர்கள் எவரும் உயர்ந்த நிலைக்கு வர முடி யாது. திமுகவை யாரும் அழிக்கவேண்டாம். அக்கட்சியினை ஸ்டா லினே அழித்துவிடுவார். நாம் அமைதியாக இருந்தால் போதும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான பாண்டியன், காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவை உறுப் பினர் முருகுமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், கே.கே.கலைமணி, அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பு.தா. இளங்கோவன், அண்ணாகிராமம் ஒன்றியத் தலை வர் வேலங்காடு ஜானகிரா மன், பண்ருட்டி நகராட்சி முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலா ளர்கள் பாபு, பெருமாள், வீரப் பெருமாநல்லூர் கூட்டுற சங்க தலைவர் ராம்குமார், உள்ளிட்டோர் கூட்டத்தில் பங் கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x