

குஜராத்திலும் காகங்கள் இறந்ததையடுத்து அங்கும் பறவைக் காய்ச்சல் பரவி உள்ளதா என ஆய்வு நடந்து வருகிறது. பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஒரே நாளில் முட்டை விலை 25 காசு குறைந் துள்ளது. இதனால் நாமக்கல் பண்ணை யாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள், கோழிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. பறவைக் காய்ச்சலை பேரிட ராக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் சுமார் 70 ஆயிரம் பறவை கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்தப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனிடையே, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. அதன்படி, 3 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று கேரளா சென்றடைந்தனர். பறவைக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்து, தடுப்பு மற்றும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிடு வதுடன் மாநில அரசு அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச் சலப் பிரதேசம் ஆகிய மாநிலங் களிலும் ஏராளமான பறவைகள் இறந்ததை யடுத்து, அங்கு பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஹரியாணா மாநிலத்தில் 10 நாளில் 4 லட்சம் பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவை பறவைக் காய்ச்ச லால் இறந்ததனவா என்பதை உறுதி செய்ய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தென் மாநிலங்களில் இருந்து கோழி களைக் கொண்டுவர மத்திய பிரதேச அரசு 10 நாட்களுக்கு தடை விதித்துள்ளது. ஒடிசா, உ.பி. மாநிலங்களில் இதுவரை பறவைக் காய்ச்சல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பறவைக் காய்ச் சல் பரவுவதைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ள தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் மொதேரா கிராமத்தில் உள்ள சூரியன் கோயில் வளாகத்தில் 4 காக்கைகள் இறந்து கிடந்தன. இதற்கு பறவைக் காய்ச்சல் காரணமா என்று கண்டறிய அதன் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத் துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் ஜம்மு காஷ்மீரில் உதாம்பூர் மாவட்டத்தில் சுமார் 150 காக்கைகளும் கர்நாடகாவின் தட்சிண் கன்னடா பகுதி யில் 6 காகங்களும் இறந்துள்ளன. இவற்றின் மாதிரிகளும் பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நுகர்வு குறைந்தது
பறவைக் காய்ச்சலால் கேரளாவில் வாத்து, கோழி மற்றும் முட்டை நுகர்வு சரிந்துள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்புவதும் நேற்று முதல் குறைந்துள்ளது. இந்நிலை யில், நேற்று நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் பி.செல்வராஜ் தலைமை யில் நடந்தது. இதில், 510 காசுகளாக இருந்த முட்டை விலை 25 காசுகள் குறைத்து 485 காசுகளாக நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 25 காசு கள் குறைந்திருப்பது பண்ணையாளர் கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதேபோல் ஒரேநாளில் கறிக்கோழி விலையும் கிலோவுக்கு ரூ.14 சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.