Published : 29 Jan 2014 10:30 AM
Last Updated : 29 Jan 2014 10:30 AM

பொள்ளாச்சியை மீண்டும் குறிவைக்கும் ம.தி.மு.க- வேட்பாளர் ரெடி... வேலைகளும் ஜரூர்

கடந்த முறை ஈரோடு தொகுதியை வென்றெடுத்த மதிமுக இந்தமுறை பொள்ளாச்சி தொகுதியிலும் வெற்றிக் கனியை எட்டிப்பறிக்கத் திட்டமிடுகிறது.

ஈரோடு தொகுதியில் நடப்பு எம்.பி. கணேசமூர்த்திக்காக முன்கூட்டியே தேர்தல் பிரச்சா ரத்தை தொடங்கிவிட்ட வைகோ, பொள்ளாச்சியை மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வர னுக்காகத் தயார்படுத்துவதாக சொல்கிறார்கள். பொள்ளாச்சி ரிசர்வ் தொகுதியாக இருந்த போது இரண்டுமுறை வெற்றி பெற்றிருக்கிறது மதிமுக.

கடந்த முறை பொதுத் தொகுதியாக மாறியதும் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளும் பொள்ளாச்சிக்கு முன்னைவிட வேகமாய் பந்தயம் கட்டி நின்றன. சீரமைக்கப்பட்ட பொள்ளாச்சி தொதியில் கவுண்டர்கள், அருந்ததி யர்களுக்கு அடுத்தபடியாக நாயுடு சமூகத்தினரும் அதிகமாக இருப்பதால் மதிமுகவுக்கு இங்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது.

கடந்த முறை கொமுக-வின் பெஸ்ட் ராமசாமி, அதிமுகவின் சுகுமாரன், திமுகவின் சண்முகசுந்தரம் ஆகியோர் போட்டியிட்டனர். சுகுமாரன் வெற்றிபெற்றார். இந்த மூவருமே கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல் இந்த முறையும் இங்கு முக்கியக் கட்சிகள் கவுண்டர்களைத்தான் களமிறக்கக்கூடும்.

இந்தத் தொகுதி தங்கள் வசம் இருந்தபோது தலித் மற்றும் பொதுப் பிரச்சினைகளுக்காக மதிமுக குரல் கொடுத்திருக்கிறது என்பதால் அந்தக் கட்சிக்கு தலித்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்கிறது. இதையெல்லாம் கணக்கில் வைத்துத்தான் மீண்டும் இங்கே பம்பரம் சுற்ற வருகிறார் வைகோ. தொகுதிக்குள் தேர்தல் ஆலோ சனைக் கூட்டங்களை விறுவிறு என நடத்திக் கொண்டிருக்கிறது மதிமுக.

இந்தத் தொகுதிக்கான வேட்பாளராக வைகோ தேர்வு செய்து வைத்திருக்கும் ஈஸ்வரன், பொதுப் பிரச்சினைகளில் போராட்ட களத்தில் நின்று மக்களுக்கு அறிமுகமானவர் என்பதால் மதிமுக இந்தக் தொகுதியை மலைபோல் நம்பு கிறது.

இதுகுறித்து ’தி இந்து’ விடம் பேசிய ஈஸ்வரன், “தேர்தலை குறி வைத்து நாங்கள் மக்கள் பிரச்சினை களில் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக குரல்கொடுப்பது எங்களின் இயல்பு.

பொள்ளாச்சி எங்களுக்கு கிடைக்குமா என்பதை கூட்டணி முடிவு செய்யும். அப்படியே கிடைத்தாலும் வேட்பாளரை வைகோதான் முடிவு செய்வார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x