Published : 07 Jan 2021 02:55 PM
Last Updated : 07 Jan 2021 02:55 PM

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்கல்

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அடையாளச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வருடம்தோறும் தை மாத முதல் நாளில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற ஜனவரி மாதம் 14-ம் தேதி அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது.

இதனையொட்டி அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்காக டோக்கன் வழங்கப்பட்டது.

காளைகளின் உடலைப் பரிசோதித்து அதனுடைய உயரம் மற்றும் வேறு ஏதும் காயங்கள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்பட்டு பின்னர், அதற்கான அடையாளச் சான்றிதழை கால்நடை மருந்தக உதவி இயக்குனர் சரவணன் காளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து வருகிற 11-ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளுடன் கடந்த வருடம் ஐந்து பேரும் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த வருடம் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அவர்களுடைய புகைப்படம் மற்றும் ஆதார் நகலை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x