

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் இன்று (ஜன. 07) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பா.ஸ்ரீதர், திருச்சி மாவட்டச் செயலாளர் பி.கே.திலீப்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்குவதுடன், பிற சாதியினருக்கும் அவரவருக்கான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் க.வைத்தி தலைமையில் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி மைய அலுவலகத்துக்குக் கோரிக்கைகளை முழக்கமிட்டவாறு ஊர்வலமாக வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், முக்கிய நிர்வாகிகள் மட்டும் மாநகராட்சி அலுவலகத்துக்குள் சென்று மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.