தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை செயலர் கடிதம்: திரையரங்குகளில் 100% பார்வையாளர் அனுமதி ரத்து?

தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை செயலர் கடிதம்: திரையரங்குகளில் 100% பார்வையாளர் அனுமதி ரத்து?
Updated on
2 min read

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கான அனு மதியை ரத்து செய்து, மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்படி புதிய உத்தரவை பிறப்பிக்கும்படி தமிழக தலைமைச் செயலர் கே.சண் முகத்தை மத்திய உள்துறை செய லர் அஜய் பல்லா கடிதம் மூலம் வலி யுறுத்தியுள்ளார். இதனால் அந்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய் யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் திரையரங்கங்கள், மல்டி பிளக்ஸ்களில் கடந்த ஜன.4 முதல் பார்வையாளர்கள் எண்ணிக்கையை 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசின் இந்த உத்தரவுக்கு திரைத்துறையினர் வரவேற்றாலும் சுகாதாரத் துறை மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அரசின் மருத்துவ நிபுணர் குழு வைச் சேர்ந்த பிரப்தீப் கவுர், மருத் துவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித் தனர். தற்போது தமிழக சுகா தாரத் துறையும் அதிருப்தி தெரிவித் துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தலை மைச் செயலர் கே.சண்முகத்துக்கு, மத்திய உள்துறை செயலர் அஜெய் பல்லா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, தற்போது ஜன.31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறையின் வழி காட்டு நெறிமுறைகள்படி, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளி யில் உள்ள சினிமாஸ், திரையரங் கங்கள், மல்டி பிளக்ஸ்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு கடந்த ஜன.4-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதியளிப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது கடந்தாண்டு டிசம்பர் மாதம் மத்திய உள்துறை வெளியிட்ட உத்தரவை நீர்த்துப் போக செய்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டப்படியான விதிமுறைகளை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீர்த்துப்போகச் செய்யக்கூடாது. அவற்றை அனைத்துவிதத்திலும் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நான் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

மேலும், கடந்தாண்டு டிசம்பர் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்த வழக்கு ஒன்றில், மத்திய மாநில அரசுகளால் வெளியிடப்படும் வழி காட்டு நெறிமுறைகள் கண்டிப் பாக அமல்படுத்தப்பட வேண் டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு மத்திய உள்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, உடனடியாக உரிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று, சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் வருவாய்த் துறையினருடன் ஆலோசித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்றும் இதனால் இந்த உத்தரவு ரத்து ஆகக்கூடும் என்றும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைக்கவில்லை

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள பொது சுகாதாரத் துறை நிபுணர் குகாநந்தம் கூறியதாவது:

சமூக இடைவெளியின்றி அனைவரும் ஒன்றாக அமரும்போது ஒருவருக்கு அறிகுறியற்ற முதல்நிலை தொற்று இருந்தாலும், மற்றவர்களுக்கு எளிதில் பரவும். எனவே, 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தான் நாங்கள் பரிந்துரை அளித்தோம். 100 சதவீத இருக்கைகளுக்கு பரிந்துரைக்கவில்லை. ரசிகர்கள் எதையும் பொருட்படுத்தாமல் குவியக்கூடும் ஆபத்து இருப்பதால் கூடாது என்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, “மருத்துவக்குழுவின் எதிர்ப்பு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகள் 100 சதவீதம் இயங்கினால் தான் நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in