

மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2 வார காலத்துக்குள் மீனவர் சிறைப் பிடிப்பு சம்பவங்கள் தொடர் கின்றன. ராஜபட்சேவின் உண்மை யான முகம் தெளிவுப்படுத்தப்பட்டு விட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சாயக்கழிவு நீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். 13-வது நிதிக்குழுவில் மானியம் மூலம் பொது சுத்தி கரிப்பு நிலையம் அமைக்க ரூ.200 கோடியை, காங்கிரஸ் அரசு ஒதுக் கியது. இதை மாநில அரசு முழுமை யாகப் பயன்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையால் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்நிறுவனங்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத் தில் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி ஏற்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் அரசின் முழுமுயற்சிதான் காரணம். இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெருமளவை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். மாநில அரசும் வலியுறுத்தி கேட்டுப்பெற வேண்டும்
மோடி பிரதமராக பொறுப் பேற்ற 2 வார காலத்துக்குள் மீனவர் சிறைப்பிடிப்பு சம்பவங்கள் தொடர் கின்றன. இதன் மூலம் ராஜ பட்சேவின் உண்மையான முகம் தெளிவுப்படுத்தப்பட்டுவிட்டது. மீனவர் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க மத்திய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளம் உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாடு முழுவதும் உள்ள பிரச்சினைகளை மக்களவையில் எழுப்பி தீர்வு காணமுடியும்.
தனிமைப்படுத்த முடியாது
மாநில கட்சிகளுக்கு அந்தந்த மாநில பிரச்சினைகளைப் பற்றி தான் கவனம் இருக்கும். எனவே, அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் ஆகியவை சேர்ந்து காங்கிரஸை தனிமைப்படுத்திவிட முடியாது.வரலாறு காணாத வெற்றியை யும், தோல்வியையும் சந்தித்த கட்சி காங்கிரஸ்.
எனவே, தோல்வி குறித்து முழுமையாக ஆய்வு செய்து கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை உறுதியான நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.