காரைக்குடி பகுதியில் இரண்டாம் பருவம் முடிந்தபிறகு பாடப்புத்தகங்கள் விநியோகம்: மாணவர்கள் அதிருப்தி

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிப் பகுதியில் இரண்டாம் பருவம் முடிந்தபிறகு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

கரோனாவால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து ஒன்று முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, பொதிகை உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு வழங்கிய ‘லேப்டாப்’ மூலம் ‘ஆன்லைன்களில்’ பாடங்கள் எடுக்கப்படுகின்றன.

மேலும் இலவச பாடப்புத்தகங்கள் பிளஸ் 2, 10-ம் வகுப்பு மாணர்களுக்கு கடந்த ஜூலை மாதமும், அதைத்தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் வழங்கப்பட்டன. இதில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ கல்வி என்பதால் பருவம் வாரிய வழங்கப்படுகின்றன.

அவ்வகுப்புகளுக்கு டிசம்பருடன் 2-ம் பருவம் முடிவடைந்தது. ஆனால் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட காரைக்குடி பகுதியில் 2-ம் பருவம் வழங்கவில்லை.

இதற்கிடையில் கடந்த மாதம் மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடையில் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றதாக புகார் எழுந்தது. இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து தற்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமைஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘இரண்டாம் பருவம் முடிந்தபிறகு பாடப்புத்தகங்களை விநியோகம் செய்கின்றனர். அதுவும் பல பள்ளிகளுக்கு வழங்கவில்லை. மூன்றாம் பருவம் தொடங்கிய நிலையில் இதுவரை அதற்குரிய பாடப்புத்தகங்களும் வழங்கவில்லை. இதனால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்,’ என்று கூறினார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ தாமதமாக தான் வந்தது. தொடர் மழையால் விநியோகிக்க முடியவில்லை. இதனால் மூன்றாம் பருவம் புத்தகத்துடன் சேர்த்துக் கொடுக்கிறோம்,’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in