வேளாண் சட்டங்களை எதிர்த்து விருதுநகரில் 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம்: 243 பேர் கைது

வேளாண் சட்டங்களை எதிர்த்து விருதுநகரில் 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம்: 243 பேர் கைது
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் இன்று 6 இடங்களில் சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 243பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மத்திய அரச கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரியும், மின்சார சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் போக்கை கைவிடக்கோரியும், கரோனா காலத்தில் வேலையிழந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.7,500 வழங்கக்கோரியும் சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.

சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன நிர்வாகி வெள்ளத்துரை முன்னிலை வகித்தார். அதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 54 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இதேபோன்று, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய இடங்களிலும் சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 243 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in