

மீனவர் பிரச்சினைக்கு திமுக ஆட்சியில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என பாம்பனில் மீனவர்களிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.
‘நமக்கு நாமே’ பயணத்தின் 11-வது நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பல்வேறு தரப்பினரை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
பரமக்குடியில் திறந்த வேனில் ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க. ஆட்சியின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ரூ.617 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தின் பெருன்பான்மையான பகுதி களில் குடிநீர் பிரச்சினை தீர்ந்துள் ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆடிப்பட்டத்தின்போது வைகை அணையில் இருந்து விவசாயத் துக்குத் தண்ணீர் திறந்துவிடப் படும்.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் தண்ணீர் திறந்து விடுவதில்லை எனத் தெரிவித்தார்.
பின்னர் பிற்பகலில் பாம்பனில் மீனவர்களின் குறைகளைக் கேட் டறிந்த ஸ்டாலின், கச்சத் தீவை மீட்பேன் என்ற வாக்குறுதியை ஜெயலலிதா நிறைவேற்றினாரா எனக் கேள்வி எழுப்பியதுடன், திமுக ஆட்சியில் மீனவர் பிரச் சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.
பின்னர், ராமேசுவரம் செல்லும் வழியில் பேக்கரும்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, ராமேசு வரம் ராமநாத சுவாமி கோயில் அர்ச்சகர்களுடன் கலந்துரையாடி னார்.