

ஆம்பூர் அருகே நிலத்தகராறில் தொடர்புடைய இளைஞரின் குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தண்டனை வழங்கிய நாட்டாண்மைதாரர்களை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடச்சேரி கிராமம், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சம்பத்(63). இவரது மனைவி கண்ணகி(58). இவர்களது மகன் ஹரி(35). இவர், வடச்சேரி பகுதியில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹரி தனது வீட்டுக்கு அருகே செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான 925 சதுர அடி நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கி பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
அந்த இடத்தின் அருகே வீடு கட்டி வசித்து வரும் கோவிந்தராஜ் (40)என்பவர், ஹரி விலைக்கு வாங்கிய இடம் தன்னுடையது எனக்கூறி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை நீண்ட நாட்களாக நீடித்து வந்தது. இதுகுறித்து கோவிந்தராஜ் ஊர் நாட்டாண்மைதாரர்களான துரைராஜ், குமார், ஊர் முக்கியஸ்தர்களான வேலுமணி மற்றும் கண்ணன் ஆகியோரிடம் முறையிட்டார்.
இதையடுத்து, கடந்த 2 மாதங் களுக்கு முன்பு கோவிந்தராஜ் மற்றும் ஹரி ஆகியோரை நேரில் அழைத்து ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நில அளவையரை கொண்டு இடத்தை அளந்து அதன்பிறகு காலிமனை யாருக்கு சொந்தம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் எனக்கூறியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, நில அளவையர் மூலம் சர்ச்சைக்குரிய இடம் அளக்கப்பட்டது. இதில், கோவிந்தராஜூக்கு 100 அடி இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என ஊர் நாட்டாண்மைதாரர்கள் ஹரியிடம் கூறியதாக கூறப்படுகி றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹரி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமாரிடம் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார். அதில், ஊர் பெரியவர்கள் மூலம் கோவிந்தராஜ் தனக்கு சொந்த மான இடத்தை அபகரிக்க திட்ட மிடுவதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையறிந்த ஊர் நாட்டாண்மை தாரர்கள் மற்றும் முக்கியதஸ்தர்கள் ஒன்றிணைந்து ஊர் கட்டுப்பாட்டை ஹரி மற்றும் அவரது பெற்றோர் மீறியதாக கூறி ஹரி குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக வும், அவர்களுடன் ஊர் பொதுமக் கள் யாரும் பேசக்கூடாது, பொது குழாயில் தண்ணீர் எடுக்கக்கூடாது, கோயிலுக்குள் அவர்கள் யாரும் வரக்கூடாது, அவர்களுக்கு தேவையானப்பொருட்களை ஊர் மக்கள் யாரும் வழங்கக்கூடாது, மீறினால், ஹரி குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பவர்களும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என நேற்று காலை தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹரி தனது பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் ஆம்பூர் - உமராபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவலறிந்ததும், ஆம்பூர் துணை காவல் கண்காணிப் பாளர் சச்சிதானந்தம், உமராபாத் காவல் துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஊர் பெரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சர்ச்சைக்குரிய இடம் முறையாக அளவீடு செய்வதாக வாக்குறுதியளித்தனர்.
இதனையேற்ற ஹரி தனது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். நாடு சுதந்திரமடைந்து 76 ஆண்டுகள் ஆனப்பிறகும் ஒரு சில கிரா மங்களில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து தண்டனை வழங்கும் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருவது பொது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.