

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று (ஜன.05) தனது 66-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, மம்தா பானர்ஜிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன் முகநூல் பக்கத்தில் இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், "மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்.
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு தங்களின் சேவையும் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.
தங்கள் வாழ்வில் நல்ல உடல்நலனும், வெற்றிகளும் அடைய வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.