அரசு மருத்துவக் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க 3 குழுக்கள்- மாணவர்களுக்கு டிஎம்இ எச்சரிக்கை

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க 3 குழுக்கள்- மாணவர்களுக்கு டிஎம்இ எச்சரிக்கை
Updated on
1 min read

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் கீதாலட்சுமி எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளன. இந்நிலையில் சென்னை போரூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் ராகிங் கொடுமை யால் மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ள மாணவ, மாணவி களிடையே ராகிங் பற்றிய பீதி ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதா லட்சுமி கூறியதாவது:

அரசு மருத்துவக் கல்லூரி களுக்கு வரும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான ராகிங் விழிப்புணர்வு கூட்டத்தை அந்தந்த கல்லூரிகளில் முதல்வர் கள் தலைமையில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி களில் ராகிங்கை தடுக்க கண் காணிப்புக் குழு, ராகிங்கிற்கு எதி ரான குழு மற்றும் மாணவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்த குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மேலும் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் புகார் பெட்டி வைக்கப்படும். முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் ராகிங் தொடர்பான புகார்களை இந்தப் பெட்டியில் போடலாம். மாணவர் கள் யாராவது ராகிங்கில் ஈடுபடு வது தெரியவந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in