Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா (67) திட்டமிட்டிருந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் இருந்து வெளியே வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக பசவேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் பெங்களூருவுக்கு ஆம்புலன்ஸில் அதிவேகமாக கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதானந்த கவுடாவுக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சதானந்த கவுடாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் 24 மணி நேரத்துக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சதானந்த கவுடா தன் ட்விட்டர் பக்கத்தில், '' நான் நலமாக இருக்கிறேன். ‌ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென குறைந்ததாலே மயக்கம் ஏற்பட்டது'' என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x