

பழநி முருகன் கோயில் ரோப்கார் சேவை அதிக காற்றின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி முருகன் மலைக்கோயிலுக்கு விரைவாகச் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை 7மணிக்கு துவங்க வேண்டிய ரோப்கார் சேவை சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ரோப்கார் சேவை துவங்காமல் நிறுத்தப்பட்டது.
காற்று சற்று அதிகமாக வீசுவதால் ரோப்கார் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக ரோப்கார் சேவையை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆன்லைனில் புக்கிங் செய்து வந்த பக்தர்களை மின் இழுவை ரயில் மற்றும் படிப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.