

மத்திய உள்துறை இணையமைச்சரிடம் முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது எழுத்துப்பூர்வ புகார் அளித் தார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவரை முதல்வர் நாராயணசாமி சந்தித்து அளித்த மனு விவரம்:
மக்கள் நலனுக்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார். நியமிக்கப்பட்ட பொறுப்பு வகிக்கும் அவர் அரசின் தினசரி நடவடிக்கைகளில் தலையிடுகிறார். இது ஜனநாயக அமைப் புக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. புதுச்சேரி அமைச்ச ரவையில் எடுத்த முடிவு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறிமில்களை மூடும் வகையில் செயல் படுகிறார். ஆளுநர் கிரண்பேடி புதுவை அமைச்சரவை, முதல்வர், மற்றும் அமைச்சர்களுக்கு உள்ளநிதி அதிகாரத்தை வழங்குவது இல்லை.
அரசு சார்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஒதுக்கிய நிதிக்கு அனுமதி மறுத்து அவர்களுக்கு ஊதியம் வழங்க தடையாக உள்ளார். அவரின் தலையீட்டின் காரணமாக மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஆகிறது. அவர் நேரடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி மத்திய அரசு வழங்கும் நிதியை தடுத்து நிறுத்துகிறார். மத்திய அரசு ஒப்புதல் கொடுத் துள்ள திட்டங்களையும் செயல் படுத்த விடாமல் தடுக்கிறார்.
காவல்துறை, கிராம நிர்வாகஅதிகாரி, இளநிலை எழுத்தர்,முதுநிலை எழுத்தர் போன்ற காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்ப விடாமல் தடுத்து தாமதப் படுத்துகிறார். மீனவர்கள் ஓய்வூதியத்திற்கு அனுமதி வழங்க மறுக்கி றார். அவரின் செயல்பாட்டால் மத்திய அரசுக்கு தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுகிறது. ஆளுநரை புதுவையில் தொடர்ந்து வைத்தி ருப்பது மாநில வளர்ச்சிக்கு தடை யாக உள்ளது.
புதுவை யூனியன் பிரதேச தத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் புதுவைக்கு நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசு புதுவை மாநிலத்திற்கு வரும் உதவித்தொகையை அதிகரித்து தர வேண்டும்.
15-வது நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டு தொகை ரூ.632 கோடியே 20 லட்சத்தை வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கிய 7-வது நிதிக்குழுவின் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களுக்கு தேவையான நிதியைஒதுக்கீடு செய்யவில்லை. அதை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
யூனியன் பிரதேசமான டெல்லியில் போலீஸாருக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உள்ள ஊதியத்தை மத்திய அரசுவழங்கி வருகிறது. அதேபோல் புதுவைக் கும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட் டிருந்தார்.
மொத்தம் 7 பக்க மனுவில் 9 முக்கியக் கோரிக்கைகளை மனுவாக அளித்திருந்தார்.