

நாட்டிலேயே ஊழலில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டினார்.
அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதி மங்கலத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாள ருமான எ.வ.வேலு பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் விவசாயம் தான் பிரதானம். பெரிய நிறுவனங் கள் மற்றும் தொழிற்சாலைகள் கிடையாது. விவசாயம் நிறைந்த தி.மலை மாவட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அரசு என்ன செய் துள்ளது. அதிமுக நண்பர்களே மனசாட்சி இருந்தால், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு என்னசெய்யப்பட்டது என கூறுங்கள்.
நானும் விவசாயி என பச்சைத் துண்டை போட்டுக் கொண்டு முதல் வர் பழனிசாமி பகல் வேஷம் போடு கிறார். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளு படி செய்ய மறுத்தவர் பழனிசாமி. பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்து திமுக கூட்டணியில் உள்ள 39 எம்பிக்களும் குரல் கொடுத்தனர். அதே நேரத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆதரித்தார்.
தமிழக அரசு மீது ரூ.4 லட்சம்கோடி கடன் சுமை உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின ருக்கு எதிரான வன்கொடுமைகள், தமிழகத்தில் 4 மடங்கு அதிகரித்துள் ளது. உயர் கல்விப் படிப்பில் சேரும் பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஆளுமையற்ற ஆட்சியால் மக்கள் அவதிப்படுகின்றனர். நாட்டிலேயே ஊழலில் அதிமுக தலைமையிலான தமிழக அரசு 7-வது இடத்தில் உள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் 14-வது இடத்துக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
பழனிசாமியின் ஆட்சியில் விவசாயம், கல்வி, தொழில் என அனைத்திலும் தமிழகம் பின்தங்கி உள்ளது” என்றார்.