45 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் வசதி அறிமுகம்: ஆர்டர் செய்தால் குறிப்பிட்ட நிலையத்தில் 2 மணி நேரத்தில் உணவு கிடைக்கும்

45 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் வசதி அறிமுகம்: ஆர்டர் செய்தால் குறிப்பிட்ட நிலையத்தில் 2 மணி நேரத்தில் உணவு கிடைக்கும்
Updated on
1 min read

முதல்கட்டமாக 45 முக்கிய ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் வசதி முன்னோட்டமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்தின்போது பெரும்பாலானோருக்கு உணவு பெரும் பிரச்சினையாக இருக் கிறது. சரியான உணவு கிடைக் காததால் பயணிகள் சிலர் பட்டினி யாக இருக்கும் நிலை ஏற்படும். இதைத் தடுக்க நாடு முழுவதும் 108 முக்கிய ரயில் நிலையங் களில் இ-கேட்டரிங் வசதி அறிமுகப் படுத்தப்படும் என கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. இத்திட்டத்தை அமல் படுத்துவதற்கான முழு பணிகளை இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மேற் கொண்டு வருகிறது.

தற்போது முதல்கட்டமாக புதுடெல்லி, சென்னை சென்ட் ரல், சென்னை எழும்பூர், மதுரை, மும்பை, ஹவுரா, குவஹாட்டி, அலகாபாத், கான்பூர் சென்ட்ரல், லக்னோ, வாரணாசி, திருவனந்தபுரம் சென்ட்ரல், சண்டீகர், திருப்பதி, விஜயவாடா, எர்ணாகுளம், சூரத், ஆமதாபாத் உள்ளிட்ட 45 ரயில் நிலையங்களில் இ-கேட்டரிங் வசதி முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்டர் செய்வது எப்படி?

ரயில் பயணிகள் பிடித்தமான உணவுகளை www.ecatering.irctc.co.in என்ற இணையதளம் மூலம் ஆர்டர் செய்யலாம். அல்லது 0120238389299/18001034139 என்ற கட்டணமில்லாத எண்களை தொடர்பு கொண்டு ஆர்டர் செய்யலாம். அல்லது 139 என்ற எண்ணுக்கு ரயில் டிக்கெட் பிஎன்ஆர் எண், இருக்கை எண்ணுடன் சேர்ந்து மெசேஜ் அனுப்பலாம்.

10 வகை உணவுகள்

இது தொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘இ-கேட்டரிங் வசதி வரும் மார்ச் மாதம் வரையில் முன்னோட்டமாக செயல்படும். பயணிகள் தங்களது பிஎன்ஆர் எண்ணை குறிப்பிட்டு இட்லி, தோசை, சப்பாத்தி, பிரியாணி வகைகள், சாப்பாடு, பீட்சா, பேக்கரி உணவு வகைகள் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து பெற முடியும்.

தற்போது 6 தனியார் நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 10 வகையான உணவு கள் வழங்கப்படுகின்றன. வரும் நாட்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆர்டர் செய்த 2 மணி நேரத்தில் பயணிகள் குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்கே உணவு வந்து சேரும். உணவுகளுக்கான கட் டணம் ஆன்லைன் மூலம் பெறப் படும். வெளியில் விற்கப்படும் விலைக்கே உணவுகள் வழங்கப்படும். ஆர்டரை ரத்து செய்தால், அதற்கான கட்டணம் பயணிகளின் வங்கிக் கணக்குக்கு 2 அல்லது 3 நாட்களில் வந்து சேரும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in