

வளிமண்டல மேலடுக்கு காரணமாக ஜன.5 அன்று 4 மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல் வருமாறு:
“வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.04 அன்று வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜன.05 அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
ஜன.06 அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
ஜன.07 அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:
திண்டிவனம் (விழுப்புரம்) 4 செ.மீ, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருவாரூர், தொண்டி (ராமநாதபுரம்) தலா 3 செ.மீ, நாகப்பட்டினம், மஹாபலிபுரம், காரைக்கால், ராமேஸ்வரம் தலா 2 செ.மீ, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), குன்னூர் (நீலகிரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), புதுச்சேரி, வெம்பாக்கம் (திருவண்ணாமலை), கடலூர், சென்னை விமான நிலையம், காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை”
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.