Last Updated : 03 Jan, 2021 09:45 AM

 

Published : 03 Jan 2021 09:45 AM
Last Updated : 03 Jan 2021 09:45 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் 33,000 விவசாயிகளுக்கு 2 ஆண்டாக ரூ.150 கோடி பயிர் காப்பீடு இழுத்தடிப்பு: விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீடு 2 ஆண்டுகளாக வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.

சுமார் 33,000 விவசாயிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ. 150 கோடி இழப்பீடை வழங்கக்கோரி விவசாயிகள் அடுத்தக் கட்டப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டில் நெல் பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக இழப்பீடு தராமல் இழுத்தடிக்கப்பட்டு, விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்துக்குப் பிறகு கடந்தாண்டு ஆகஸ்டில் வழங்கப்பட்டது.

இதுவும் மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்களில் முதற்கட்டமாக 283 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 82106 விவசாயிகளுக்கு மட்டும், நூறு சதவீத இழப்பீட்டுத் தொகையாக பயிர் அறுவடை மகசூல் இழப்பு அடிப்படையில் ரூ.366.23 கோடி வழங் கப்பட்டது.

மீதி 117 வருவாய் கிராம விவசாயிகள் மற்றும் 5 ஏக்கருக்கு மேல் உள்ள பெரிய விவசாயிகள் ஆகியோருக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் விவசாயிகள் திரண்டு ஆட்சியரிடம் இழப்பீடு கேட்டு மனு அளித்த வண்ணம் உள்ளனர். அதனையடுத்து கடந்தாண்டு நவம்பரில் பெரிய விவசாயிகள் 6,901 பேருக்கு ரூ. 61 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், 117 வருவாய் கிராம விவ சாயிகளுக்கு ரூ. 200 கோடிக்கும் மேல் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதற்கு காரணம் இங்கெல்லாம் விதைத்த நெல் முளைக்காமலும், விதைத்து மகசூலுக்கு வராமல் கருகிப் போனதாலும், 25 சதவீதம் அதாவது ஏக்கருக்கு ரூ. 5300 முதல் 5600 வரையே தர முடியும் எனக் காப்பீடு நிறுவனம் கூறியது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் பயிர் அறுவடை மகசூல் இழப்பு அடிப் படையிலேயே இழப்பீடு வழங்க வேண் டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்தது.

மத்திய அமைச்சரை சந்தித்த எம்பி

இதனால் ஒன்றரை ஆண்டுகளாக பயிர் இழப்பீட்டுத் தொகை 117 கிராமங்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படு கிறது. இப்பிரச்சினை முதல்வர், மத்திய, மாநில வேளாண்மைத் துறை அமைச்சர்கள் வரை கொண்டு செல்லப் பட்டும் தீர்வு காணப்படவில்லை.

கடந்த வாரம், ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர், செயலாளரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பரில் காப்பீடு நிறுவனம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக வேளாண்மைத்துறையின் உத்தரவை கண்டுகொள்ளாமல் 25 சதவீத இழப்பீட்டுத் தொகையை ஒதுக் கீடு செய்தது.

இந்த நிதி சில ஊர்களில் விவ சாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் விவ சாயிகள் 100 சதவீதம் இழப்பீடு அதாவது ஏக்கருக்கு ரூ.22,600 வழங்கக்கோரி அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் முத்துராமுவிடம் கேட்டபோது, 25 சதவீத இழப்பீடுத் தொகையை ஏற்கமாட்டோம். பழைய மாவட்ட ஆட்சியர் 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கடிதம் எழுதினார். தற்போதைய ஆட்சி யரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளார். 100 சத இழப்பீட்டை வழங்க வில்லை என்றால் அடுத்த கட்டப் போராட்டங்களை தொடர்வோம் என்றார்.

ஆர்.எஸ்.மங்கலம் பகுதி விவசாயி கவாஸ்கரிடம் கேட்டபோது, முழு இழப்பீடு வழங்கக்கோரி ஜனவரி 6-ம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x