

தமிழக அரசியலை தீர்மானிப்பது பாஜகதான் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
தருமபுரி மாவட்ட பாஜக சார்பில் அணி மற்றும் பிரிவு பிரதிநிதிகள் மாவட்ட மாநாடு தருமபுரியில் நேற்று நடந்தது. பாஜக தமிழக தலைவர் முருகன் இந்நிகழ்ச்சியில் பேசியது:
தங்களின் விளைபொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. அதற்கு வழிசெய்யும் வகையில் புதிய வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2016 சட்டசபை தேர்தலின்போது திமுக தங்கள் தேர்தல் அறிக்கையில் இதைத் தான் கூறியது. அதை மத்திய அரசு சட்டமாக்கியிருப்பதை நியாயமாக ஸ்டாலின் பாராட்டி இருக்க வேண்டும். மாறாக, விவசாயிகளை திசை திருப்பி தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது ஏமாற்றுகளை தமிழக விவசாயிகள் நன்றாக உணர்ந்துள்ளனர். ஸ்டாலினையும், கம்யூனிஸ்ட்களையும் விவசாயிகள் புறக்கணிக்கவே செய்துள்ளனர்.
கூட்டணியின் வேட்பாளர்
இன்று தமிழக அரசியலை, அரசியல் நகர்வை தீர்மானிப்பது பாஜக. அதற்காக கடுமையாக உழைப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை நிறைவேற்றுவோம். கூட்டணியின் முதல்வர் வேட்பளர் அரியணையில் அமரும் காலம் வெகு அருகில் உள்ளது. இவ்வாறு எல்.முருகன் பேசினார்.