Published : 02 Jan 2021 08:14 PM
Last Updated : 02 Jan 2021 08:14 PM

இலவச காலணிகள் கொள்முதல் டெண்டர் நடைமுறையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பள்ளி மாணவர்களுக்கான இலவச காலணி வழங்குவதற்கான கொள்முதல் டெண்டரில் குறைந்த தொகை தெரிவித்திருந்தும் சட்டவிரோதமாக நீக்கியதாக நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில், நடப்பு 2020-21-ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கான காலணிகள் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு பாடநூல் கழகம், கடந்த மார்ச் மாதம் டெண்டர் கோரியது.

இந்த டெண்டருக்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், எந்த காரணமும் தெரிவிக்காமல் தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, ஹரியானாவைச் சேர்ந்த பிஎன்ஜி பேஷன் கியர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் நிறுவனம் தரப்பில் , “குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்த தங்கள் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்து விட்டு, பேட்டா நிறுவனத்துக்கும், பவர்டெக் எலெக்ட்ரோ இன்ப்ரா என்ற நிறுவனத்துக்கும் பணிகள் வழங்க இருக்கிறார்கள், அதற்கு தடை விதித்து, தங்களுக்கு டெண்டர் ஒதுக்க வேண்டும்”. என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x