

சிமி அமைப்பு மீதான தடையை மேலும் நீட்டிப்பது அல்லது நீக்குவது தொடர்பாக சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தின் விசாரணை குன் னூரில் வியாழக்கிழமை தொடங்கி யது.
இந்தியாவில் தடை செய்யப் பட்ட இயக்கங்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது அல்லது நீக்குவது தொடர்பாக சட்டத்துக் குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாய அமர்வு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி விசாரணை நடத்துகிறது. இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை 2012ம் ஆண்டு மதுரையில் நடை பெற்றது. இந்த ஆண்டு நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர்மன்றக் கூடத்தில் தீர்ப்பாயம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்க் தலைமையில் வியாழக்கிழமை கூடியது. அப்போது தடை செய் யப்பட்ட சிமி அமைப்பின் தடையை மேலும் நீட்டிப்பது அல் லது நீக்குவது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதம்
அரசு தரப்பில் தமிழக புல னாய்வு காவல்துறை கண்காணிப் பாளர் அருளரசு, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அகர்வால், மல் ஹோத்ரா ஆகியோர் ஆஜராயினர். சிமி அமைப்பு தரப்பில் வழக்கறிஞர் அசோக் அகர்வால் ஆஜரானார்.
1999-ம் ஆண்டு சிமி அமைப்பு சார்பில் கோவையில் நோட்டீஸ் விநியோகித்தது, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தடையை நீட்டிக்க வேண்டும் என அரசு தரப்பில் எஸ்.பி. அருளரசு வலியுறுத்தினார்.
சிமி இயக்கம் சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் அசோக் அகர் வால், பல வழக்குகளில் சிமி அமைப் பைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர். ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. எனவே, சிமி அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டன. இந்து முன் னணி சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகரன், சிமி அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என உறுதிப் பத்திரம் தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், திருவள்ளூரில் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சுரேஷ் மர்ம நபர்களால் புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். எனவே, அந்த அமைப்பின் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில், தடை செய் யப்பட்ட இயக்கங்கள் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை தொடர்ந்து நடைபெறுகிறது.
பலத்த பாதுகாப்பு
இந்த விசாரணையை முன்னிட்டு குன்னூர் நகராட்சி அலுவலகத் தில் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே நகராட்சி ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப் படவில்லை.