கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி: போக்குவரத்துக் கழக ஊழியரிடம் விசாரணை

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி: போக்குவரத்துக் கழக ஊழியரிடம் விசாரணை
Updated on
1 min read

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி பணி ஆணை

பணம் கொடுத்தவர்கள் வேலை வாங்கித் தருமாறு கேட்க, கரோனா முடிந்ததும் பணி ஆணை வரும் என்று கூறிஉள்ளார். இடையில், அதிகதொந்தரவு கொடுத்த இருவருக்கு போலியாக பணிஆணை தயார் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டதில், மணிகண்டன் என்பவரை தன்னுடைய அலுவலகத்திலேயே உதவியாளர் போன்று வைத்துள்ளார்.

அவருக்கு மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியமும் வழங்கி வந்துள்ளார். இதனிடையே மணிகண்டன், தனக்கு வங்கி மூலம்ஊதியம் வழங்காமல், நேரடியாக எப்படி வழங்குகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது, பணிக்கான அடையாள அட்டைவந்த பின்னர்தான் வங்கியில் கணக்குத் தொடங்க முடியும்என பாலச்சந்தர் சமாளித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த மணிகண்டன், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று பாலச்சந்தரை விசாரணைக்காக கடலூர் அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்து இரு செல்போன்கள், போலி பணி ஆணைநகல்கள், அரசு முத்திரை ஆகியவற்றை பறிமுதல் செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in