Published : 02 Jan 2021 03:26 AM
Last Updated : 02 Jan 2021 03:26 AM

தி.மலை மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘நம்ம திருவண்ணாமலை’ கைபேசி செயலி அறிமுகம்: அரசு திட்டங்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளலாம்

ஆரணியில் நேற்று நம்ம திருவண்ணாமலை என்ற கைபேசி செயலியை தொடங்கிவைத்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். அருகில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘நம்ம திருவண்ணாமலை’ என்ற கைபேசி செயலியின் தொடக்கம் ஆரணி வட்டாட்சியர் அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். ‘நம்ம திருவண்ணாமலை’ என்ற கைபேசி செயலியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில், ஆரணி கோட் டாட்சியர் (பொறுப்பு) ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ஆட்சியர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நம்ம திருவண்ணாமலை” என்ற செயலி மூலம் அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய முயற்சிகள் குறித்து இரு வழி தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தகவல்களை திறம்பட பரப்பவும், மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளவும் வழி வகுக்கும்.

தி.மலை மாவட்ட மக்களின் ஈடுபாட்டை மேம்படுத்தவும், பல்வேறு அரசு திட்டங்களின் செயல்பாடு, குறை தீர்வு, துறை ரீதியான தகவல்கள், மாவட்ட அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் மற்றும் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகள் குறித்த தகவல்கள், இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன. சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பிளாஸ்டிக் இல்லா திருவண்ணா மலை மாவட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மை உட்பட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செயலி மூலம் மக்களை ஈடுபடுத்த முடியும்.

பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில், “எனது புகார்கள்” என்ற பிரத்யேக பிரிவின் கீழ் அளிக்கப்படும் புகார்களின் நிலை குறித்த அறிவிப்பை பெற முடியும்.

நம்ம திருவண்ணாமலை செயலியில் மாவட்டம் குறித்த விவரங்கள், வரை படங்கள், மாவட்ட அலுவலர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்கள், அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் விவரங்கள் உட்பட அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தினசரி வெளியிடப்படும் செய்திகள், துறை ரீதியான அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.

நம்ம திருவண்ணாமலை செயலியில், கே.ஒய்.சி. பயன் படுத்தி தங்களது கைபேசி எண்ணை அளித்து ஓடிபி மூலம் சரிபார்த்து விவரங்களை பதிவு செய்யலாம். நம்ம தி.மலை செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லலு www.tiruvannamalaimaavattam.com என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x