Published : 15 Oct 2015 08:38 AM
Last Updated : 15 Oct 2015 08:38 AM

சுய உதவிக்குழு பெண்களுக்கு ஆன்லைன் வர்த்தகப் பயிற்சி: அண்ணா பல்கலை மாணவிகள் அளிக்கின்றனர்

சுய உதவிக்குழு பெண்கள் தங்கள் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் 2 நாள் பயிற்சி அளிக்கின்றனர்.

தமிழகத்தில் 6 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இதில் சுமார் 90 லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் பலர் தாங் கள் செய்யும் கைவினைப் பொருட் கள், நகைகள், புடவைகள் ஆகிய வற்றை கண்காட்சிகளில், அரசு விற்பனை மையங்களில் விற்று வருகின்றனர். இந்தப் பொருட் களை விற்பதற்காக மதி பஜார் என்ற இணையதளம் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனா லும், பல பெண்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் அவர்களால் பயனடைய இயலவில்லை.

அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறையைச் சேர்ந்த 5 மாணவிகள், சுய உதவிக்குழு பெண்களுக்காக ஆன்லைன் வர்த்தகப் பயிற்சி அளிக்கின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து 55 சுய உதவிக்குழு பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். நுங்கம் பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது.

தொடக்க விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் அமுதவல்லி கூறும் போது, ‘‘நகர்ப்புறங் களில் உள்ள சுய உதவிக்குழு பெண்களுக்கு இணையதளம் பற்றிய விழிப்புணர்வு ஓரளவு இருக் கிறது. எனவே, கிராமப்புறங்களில் உள்ள 3.8 லட்சம் சுய உதவிக்குழுக்கள் மீதுதான் அதிக கவனம் செலுத்துகிறோம்’’ என்றார்.

அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறைத் தலைவர் எஸ்.கவுரி கூறும்போது, ‘‘சுய உதவிக்குழு பெண்கள் தயாரிக்கும் தரமான பல பொருட்கள், விற் பனை நுணுக்கங்கள் தெரியாத தால் ஒரு பகுதியிலேயே முடங்கி விடுகின்றன. ஆன்லைன் வர்த்த கத்தை கற்றுக்கொண்டால், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் விற்கலாம். எங்கள் மாணவர்கள் மூலம் இதுபோன்ற பயிற்சி அளிப் பது இதுதான் முதல் முறை’’ என்றார்.

பயிற்சியை அளிக்கவுள்ள மாணவிகள் துர்காபாய், அமிர்தா, ஜனனி, ஷர்மிளா, திவ்யா ஆகியோர், ‘‘சுய உதவிக் குழு பெண்களுக்கு முதலில் இ-மெயில் ஐடி உருவாக்கித் தந்து அதன்மூலம் பேஸ்புக் பக்கங்கள் உருவாக்குவோம். அவர்களின் பொருட்களை இணையத்தில் வெளி யிடுவதற்கு ஏற்றவகையில் புகைப் படங்கள் எடுத்துக்கொடுத்து அதை எப்படி பதிவேற்றம் செய்வது, எப் படி வங்கிக் கணக்கில் கட்டணம் வசூ லிப்பது ஆகியவற்றை சொல்லித் தரவுள்ளோம்” என தெரிவித்தனர்.

கடந்த 5 ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிகப்பி அருணாச்சலம், படுக்கையிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் இருந் தாலும், எவ்வாறு தனது கலைப் பொருட்களை ஆன்லைன் மூலம் வெற்றிகரமாக விற்பனை செய் கிறார் என்பதை விளக்கினார்.

அண்ணா பல்கலைக்கழக ஊடக அறிவியல் துறை பேரா சிரியர் வெங்கடலட்சுமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக சென்னை மாவட்ட திட்ட அலுவலர் சிநேக லதா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். 2-வது நாளாக இன்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x