மாநகராட்சி மூலம் பயிற்சி பெற்ற 11 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வுக்கு தகுதி

மாநகராட்சி மூலம் பயிற்சி பெற்ற 11 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வுக்கு தகுதி
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி மூலம் பயிற்சி பெற்ற 11 மாணவர்கள் யுபிஎஸ்சி முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சிபெற்று பிரதான தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் படிக்கும் ஏழை, எளிய பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பு கருதி மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) மூலம் நடைபெறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி ) மூலம் நடைபெறும் குரூப்-1, 2 மற்றும் 4 போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி 2014-15-ம் ஆண்டு முதல் மாநகராட்சி கல்வித்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

இந்த முறை 500 நபர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது. அப்பயிற்சியில் முதல் கட்டத் தேர்வில் 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பிரதான தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in