

புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2020-ம் ஆண்டு நிறைவடைந்து இன்று (ஜன. 1) 2021-ம் ஆண்டு தொடங்கியது. புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்கள் பெரும்பாலானோர் கோயில்களில் வழிபட்டனர். கோயில்களில் சிறப்பு தரிசனங்களும் நடைபெற்றன. ஆங்காங்கே புத்தாண்டு கொண்டாட்டங்களும் நடைபெற்றன. சென்னை, மெரினா கடற்கரையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜன. 1) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று புத்தாண்டை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து, மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்தார்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.