

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக போலீஸாரால் தேடப்படும் யுவராஜ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த ஜூன் 26-ம் தேதி காதல் விவகாரம் தொடர்பாக பள்ளிபாளையம் அருகே படுகொலை செய்யப்பட் டார். இதுகுறித்து 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட் டுள்ளனர்.
இந்த வழக்கில் சேலம் சங்க கிரியைச் சேர்ந்த தீரன் சின்ன மலை பேரவை நிறுவனர் யுவராஜ் என்பவரை போலீஸார் தேடிவரு கின்றனர். இந்நிலையில் கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா செப் டம்பர் 18-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ள அவரது தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை, சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு இரு வழக்குகளிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்படும் யுவராஜ், வாட்ஸ்அப் மூலம் தனது ஆடியோ பதிவு களை வெளியிட்டு வந்தார். அந்த ஆடியோவில் டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலைக்கு காவல் துறை உயரதிகாரிகள்தான் கார ணம். அதற்கான முக்கிய ஆதரங்கள் உள்ளன என குறிப்பிட் டிருந்தார். நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் யுவ ராஜின் பேட்டி வெளியானது.
பேட்டியில், “டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் அழுத்தம்தான் காரணம். சம்பந்தப்பட்ட காவல் துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என யுவராஜ் தெரிவித்திருந்தார். போலீஸாரால் தேடப்படும் யுவராஜ் தனியார் தொலைக்காட்சியில் தோன்றிய சம்பவம் போலீஸார், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் அழுத்தம்தான் காரணம். சம்பந்தப்பட்ட காவல் துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்