மீத்தேன் வாயு திட்டத்துக்கு தமிழக அரசு தடை

மீத்தேன் வாயு திட்டத்துக்கு தமிழக அரசு தடை
Updated on
1 min read

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு அனுமதி மறுத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா.மதிவாணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு குறித்து ஆய்வு செய்து, எரிவாயு உற்பத்தி செய்ய ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மண் வளம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 17-7-2013-ல் வெளியிட்ட அறிக்கையில், மீத்தேன் திட்டத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டிய அவசியத் தைத் தெரிவித்து, அதற்கான ஆய்வை மேற்கொள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், அந்தக் குழு 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, தொழில்நுட்ப வல்லுநர் குழு அரசுக்கு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. தொழில்நுட்ப வல்லுநர் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளை கவனமாகப் பரிசீலித்த தமிழக அரசு, அந்தக் குழுவின் பரிந்து ரையை ஏற்றுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் சுமார் 691 கி.மீ. பரப்பில், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் செயல்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ள திட்டத்துக்கு, தமிழக அரசால் எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காவிரி டெல்டா பகுதியில், நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயு வெளிக் கொணர்தல் மற்றும் உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது போன்ற எவ்விதமான முயற்சியை யும் தொடங்குவதற்கு முன்னர் தமிழக அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in