Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM

அரசு கல்லூரி மாணவர்கள் பழைய பயண அட்டை மூலம் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு கல்லூரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்தகல்வி ஆண்டுக்கான புதிய இலவச பயண அட்டையை அச்சடித்து, லேமினே‌ஷன் செய்துவழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாணவர்கள்இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஜனவரி மாதம் வரை...

முதலாம் ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தாம் பயின்று வரும் கல்லூரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தியும். அரசு கல்லூரி, அரசு தொழிற் நுட்ப கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள் 2019-20-ம் ஆண்டு பெற்ற இலவச பயண அட்டையை பயன்படுத்தியும் இலவசமாக கல்லூரி வரை பயணம் செய்ய ஜனவரி மாதம் வரை அனுமதிக்கலாம்.

எனவே இது குறித்து கிளை மேலாளர்கள் பணிமனை நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு உரிய வகையில் அறிவுறுத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள் தற்போதைய பயண அட்டையை காண்பித்தால் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x