

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் மொத்தம் 23 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில் மாவட்டமான காஞ்சிபுரம், கொலை மாவட்டமாக மாறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் போலீஸாரின் கண்காணிப்பு பணி களை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின், மத்திய பகுதியாக விளங்கும் செங் கல்பட்டைச் சுற்றிலும் அடிக்கடி கொலை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இந்த நிலை மாறி, தற்போது மாவட்டம் முழுவதும் கொலை சம்பவங்கள் நடந்து வருவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு இரு கோஷ்டி யினரிடயே மோதல் மற்றும் பழிதீர்க்கும் சம்பவமாக கொலைகள் நடந்தன. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் காவல் துறை தரப்பில் எடுக்கப்பட்டன. இருப்பினும் கொலை குற்றங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் இருந் தன.
கடந்த 3 மாதத்தில் மட்டும் 23 கொலை சம்பவங்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக நடந்துள்ளது. இதன்படி, மறைமலைநகர் 3, கூவத்தூர் 3, செங்கல்பட்டு தாலுகா 3, சிவகாஞ்சி 2, காஞ்சி தாலுகா 2, ஒரகடம் 2 மற்றும் மானாம்பதி, காயார், திருக்கழுக்குன்றம், விஷ்ணு காஞ்சி, சோமங்கலம், கூடு வாஞ்சேரி, சட்ராஸ், சூணாம்பேடு பகுதிகளில் தலா 1 கொலைகள் நடந்துள்ளன. இதில், கொள்ளை சம்பவத்தின்போது 3 பெண்கள் என மொத்தம் 5 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்குகளில், சூணாம்பேட்டுக்கு மாற்றப்பட்ட சென்னை வழக்கறிஞர் கொலை, ஒரகடம் இரட்டைக் கொலை, வேடல் அருகே மயிலாப்பூர் ரவுடி கொலை, மானம்பதியில் பெண் முகம் எரித்து கொலை ஆகிய வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதனால், காஞ்சிபுரம் மாவட்டம் கொலை மாவட்டமாக மாறியுள்ளது என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த நபர்களை கொலை செய்ய, காஞ்சிபுரம் மாவட்டத்தை பயன்படுத்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சோமங்கலம், சூணாம்பேடு மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் நிகழ்ந்த கொலை சம்பவங்களே இதற்கு உதாரணம்.
கல்பாக்கம் அடுத்த பழைய நடுக்குப்பம் கிராமத்தில், சவுக்கு தோப்பில் நாட்டு வெடி குண்டு தயாரித்தபோது, தவறு தலாக வெடித்ததில் இருவர் காய மடைந்தனர். இந்த சம்பவமும், காய மடைந்தவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே போலீஸாருக்கு தெரியவந்தது. இதனால், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸாரின் கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி முத்தரசியிடம் கருத்து கேட்டபோது, ‘மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவங்கள், ஒன் றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்கள். மேலும், திட்டமிட்ட கொலை சம்பவங்கள் ஏதும் நடை பெறவில்லை. கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்துள்ளோம். சென்னையைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய, காஞ்சிபுரம் மாவட்டத்தை பயன் படுத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது’ என்றார்.