

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததை நான் மனபூர்வமாக வரவேற்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல்நிலை தான் முக்கியம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி, சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம் கிராமங்களில் மினிகிளினிக் தொடக்கவிழா இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததை நான் மனபூர்வமாக வரவேற்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல்நிலை தான் முக்கியம்.
தமிழக முதல்வர் யார் என்பது குறித்து தமிழக அமைச்சர்களோ, பாரதிய ஜனதா கட்சியினரோ சொல்வதைக் கேட்கவேண்டாம். அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதில் எந்த மாற்றமும் கிடையாது.
தே.மு.தி.க., கட்சி அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. பாரதிய ஜனதாவும் அதிமுக கூட்டணியில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.