சென்னை விமான நிலைய பராமரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்: விமானத்துறை செயலர் தகவல்

சென்னை விமான நிலைய பராமரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டம்: விமானத்துறை செயலர் தகவல்
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பராமரிப்புப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய பயணிகள் போக்குவரத்து விமானத்துறை செயலர் ஆர்.என்.சவுபே தெரிவித்தார்.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் விரிவாக்கம் தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் விமான நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய பயணிகள் போக்கு வரத்து விமானத்துறை செயலர் ஆர்.என்.சவுபே, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிலைய விரிவாக்கப் பகுதிகளைச் சேர்ந்த நில உரிமை யாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆர்.என்.சவுபே கூறியதாவது:

கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை ஓராண் டுக்குள் ஒப்படைக்க உள்ளதாக நில உரிமையாளர்கள் தெரிவித் துள்ளனர். எனவே, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் கோவையில் புதிதாக சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையம் அமைக்கப் படும்.

சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுவரும் விபத்துகளால், அதை ஆசியாவில் உள்ள மோசமான விமான நிலையங்களில் ஒன்று எனக் கூறுவது தவறானது. சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணி களும், மேம்பாட்டுப் பணிகளும் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் முடியும்போது, நாட்டின் சிறந்த விமான நிலை யமாக அது இருக்கும். அங்கு ஏற்பட்டு வரும் சிறு,சிறு விபத்து கள்கூட பாரமரிப்புக் குறைபாடு காரணாகவே நிகழ்ந்துள்ளன. எனவே விமான நிலைய பரா மரிப்புப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.

விமானத்தில் பறவைகள் மோதி விபத்து ஏற்படுத்துவதைத் தவிர்க்க ‘ககன்’ என்ற நவீன தொழில்நுட்பத்தை விமானங் களில் செயல்படுத்த ஏற்கெனவே விமான நிறுவனங்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. அது செயற் கைக்கோள் அடிப்படையிலான வழிகாட்டி அமைப்பாகும். அதைப் பொருத்துவதன் மூலம் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in