

சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளதால் சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.20 ஆயிரத்து 384-க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மற்ற தொழில்களில் சிறிய அளவில் தற்காலிகமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.20 ஆயிரத்து 384-க்கு விற்கப்பட்டது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 548-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 511-க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “சர்வதேச அளவில் தங்கத் தில் முதலீடு செய்வது அதிகரித் துள்ளது. இதனால், தங்கம் விலை உயர்ந்துள்ளது. பண்டிகை நாட்கள் நெருங்கவுள்ளதால் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். தேவை யும் அதிகரித்துள்ளது. எனவே, அடுத்த சில நாட்களுக்கு தங்கத் தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.