பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரர் மர்ம மரணம்: உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமா?

பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரர் மர்ம மரணம்: உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமா?
Updated on
1 min read

திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் மணிகண்டன்(27).

கடந்த 9-ம் தேதி மணிகண்டன், திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணிகண்டன் உயிர் பிழைத் தார். உயரதிகாரிகளின் விசா ரணைக்குப் பிறகு இடமாற்றம் செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட் டம், பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.

இதையடுத்து, பணியில் இருந்த மணிகண்டனுக்கு நேற்று முன் தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சோளிங்கர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லப் பட்ட மணிகண்டன், சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். ஆனால், மணிகண்டனின் உறவினர்களோ, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுகின்றனர்.

இதற்கிடையே, மணிகண்டன் மரணம் தொடர்பாக வாட்ஸ் அப் பில் வீடியோ காட்சி ஒன்று பரவி யுள்ளது. அதில் பேசும் மணிகண் டன், ‘தான் தற்கொலைக்கு முயன்ற தற்கு உயரதிகாரிகள் கொடுத்த தொந்தரவால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணம். தன்னுடைய மரணத்துக்கு நான்கு உயரதிகாரிகள்தான் காரணம்’ என குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, தீயணைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் தெரி வித்ததாவது: மணிகண்டன் ஏற் கெனவே தற்கொலைக்கு முயன் றது தொடர்பாக விசாரணை மேற் கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட வர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணிகண்டன் மாரடைப்பால்தான் உயிரிழந்தார் என்பது மருத்துவச் சான்றிதழ் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in