Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM

அதிமுக ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது: திமுக எம்.பி., கனிமொழி குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்துள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கனிமொழி எம்.பி. நேற்று பிரச் சாரம் செய்தார். அப்போது, மகளிர் குழுவினரின் குறைகளைக் கேட் டறிந்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கான மானியம் சரியாக கிடைக்கவில்லை. கந்து வட்டிக் காரரிடம் கடன் வாங்கி சிரமத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இளைஞர்கள், படித்தவர்களுக்கு வேலை இல்லை. அதிமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சரிவ டைந்துள்ளது. பட்டாசு, தீப்பெட்டி மற்றும் பேண்டேஜ் துணி உற்பத்தி தொழிலாளர்கள், தொழில் முனை வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருணாநிதி ஒருமுறை பேசுகையில், தனது குடும்பம் என்பதை ஒரு புகைப்படத்துக்குள் அடக்கிவிட முடியாது. தமிழ்ச் சமூகமே தனது குடும்பம் எனக் கூறியுள்ளார்.

முதல்வர் மீதே ஊழல் புகார் இருக்கிற சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, செவிலியர்கள், நூற்பாலைகளில் பணிபுரியும் பெண்கள், மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் ஆகியோரை சந்தித்து கனிமொழி பேசினார். பின்னர், ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும், தளவாய்புரத்தில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்திலும் பங்கேற்றார். விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x