

ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதி காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரு கின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், அவனியாபுரம், தேனி மாவட்டம் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்பர்.
பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி காளைகளுக்கு தற்போது பல்வேறு பகுதிகளில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், குன்னூர், ஏத்தக்கோவில், டி.ராஜ கோபாலன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வளர்க்கப்பட்டு வரும் காளைகளுக்கு பிரத் யேகப் பயிற்சிகளை அளித்து வரு கின்றனர்.
மண் குவியலில் கொம்பு முட்டும் பயிற்சி, காளைகளை நீளமான கயிறுகளில் கட்டி முட்டும் பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றன. இங்கு காங்கயம், தேனி மலை மாடு உள்ளிட்ட 8 வகையான ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளன. இவை தென்மாவட்டங்களில் பல்வேறு போட்டிகளில் பங் கேற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.