Published : 28 Dec 2020 07:15 AM
Last Updated : 28 Dec 2020 07:15 AM

21 நாட்களில் 9 மின்சார ரயில்கள் தயாரிப்பு: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை சாதனை; நாட்டிலேயே அதிக உற்பத்தி என பெருமிதம்

சென்னை

நெடுந்தூரம் செல்லும் 9 புறநகர் மின்சார ரயில்களை 21 நாட்களில் தயாரித்து சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலை புதிய சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள இந்தியரயில்வேயின் ரயில் பெட்டி உற்பத்திதொழிற்சாலை (ஐசிஎஃப்) இந்தடிசம்பர் மாதம் பல்வேறு துறைகளில்சாதனை படைத்துள்ளது. உயர்நிலை தொழில்நுட்பம் கொண்ட மும்முனை மின்சக்தியில் இயங்கும் 9 நெடுந்தொலைவு புறநகர் மின்சார ரயில்களை ஐசிஎஃப் இம்மாதம் தயாரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, 21 நாட்களில் இதைதயாரித்து புதிய சாதனை படைத்துள்ளது. நெடுந்தொலைவு செல்லும் புறநகர் மின்சார ரயில்களைபொருத்தவரை, இந்திய ரயில்வேயின் எந்த ஒரு உற்பத்தி நிறுவனமும் உற்பத்தி செய்துள்ளதைவிட இது அதிகமாகும்.

ஐசிஎஃப் தயாரித்துள்ள புதியவடிவமைப்புடன் கூடிய விஸ்டடோம் சுற்றுலா ரயில் பெட்டிகளின் அதிவேகப் பரிசோதனை வெற்றிகரமாக 180 கி.மீ. வேகத்தில் நடத்தப்பட் டுள்ளது. இதற்கான இதர கட்டுமானப் பரிசோதனைகள் இம்மாதத்தில் ஐசிஎஃப்பில் செய்துமுடிக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளின் சொகுசான பயணத்துக்காக,வெளிப்புறம் தெரியக்கூடிய பெரிய கூரை கண்ணாடிகள், ரயிலின்இயக்க திசையை நோக்கி 180 டிகிரி சுற்றி அமைக்கக்கூடிய 44 பயணியர் இருக்கைகள், வைஃபை வசதியுடன் கூடியபயணிகள் தகவல் அமைப்பு போன்ற வசதிகள் இந்த விஸ்டடோம் சுற்றுலா ரயில் பெட்டிகளில் செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் நிறுவப்பட்டுள்ள மராத்வாடா ரயில் பெட்டி தொழிற்சாலையில் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட ரயில் பெட்டிக்கூடு தயாரிக்க சென்னை ஐசிஎஃப் பெரும் பங்காற்றியுள்ளது. அந்ததொழிற்சாலையில் தற்போது உற்பத்தி பணிகள் தொடங்க இது முதல் படியாக அமைந்துள்ளது.

புதிய தரச் சான்றிதழ்

ஐசிஎஃப் ஏற்கெனவே தரக்கட்டுப்பாட்டு மேலாண்மைக்காக ஐஎஸ்ஓ 9000, ஐஎஸ்ஓ 14000போன்ற பல தரச்சான்றிதழ்களை பெற்றுள்ள நிலையில், தனது உற்பத்தி திறனை மேம்படுத்தும் விதமாக, ‘இஎன் 15085’ என்ற தரச் சான்றிதழை இம்மாதம் பெற்றுள்ளது. இது ரயில் பெட்டிகள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணியில் குறிப்பிட்ட தரத்திலான வெல்டிங் தொழில்நுட்பத்துக்காக வழங்கப்படுவது ஆகும். இந்த தரச் சான்றிதழை பெறும் இந்தியரயில்வேயின் முதல் உற்பத்திநிறுவனம் ஐசிஎஃப் ஆகும்.ஐசிஎஃப் மேற்கண்ட அனைத்துசாதனைகளையும் குறைந்த பணிநாட்களில் செய்துள்ளது. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x