

மாமல்லபுரம் மற்றும் ஈசிஆர் சாலையோரங்களில் உள்ள சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என மாவட்டஎஸ்பி கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் உள்ள சொகுசு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து விடுதி மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன், காவல் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட எஸ்பி கண்ணன், ஏஎஸ்பி சுந்தரவதனம் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எஸ்பி கண்ணன் பேசியதாவது:
கரோனா அச்சம் உள்ளதால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரையில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மது விருந்துடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது.
மேலும், பண்ணை வீடுகள், விடுதிகளின் பின்புறம் உள்ள கடற்கரையில் கூடுவதற்கும், கடலில் குளிக்கவும், நீச்சல் குளங்கள் செயல்படவும், வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் 10 இடங்களில் வாகன சோதனைச் சாவடி அமைத்து வாகனங்கள் தணிக்கை செய்யப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
மேற்கண்ட சாலைகளில் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புறநகர் பகுதியில் இருந்துமாமல்லபுரத்துக்கு மோட்டார்சைக்கிள்களில் வரும் இளைஞர்கள், முட்டுக்காடு பகுதியில்தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள். குடும்பத்தினருடன் வரும் நபர்களுக்கு மட்டுமேதொடர்ந்து சாலையில் பயணிக்க அனுமதியளிக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் ஆய்வாளர் வடிவேல்முருகன் மற்றும் விடுதி நிர்வாக மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
புறநகர் பகுதியில் இருந்து மாமல்லபுரத்துக்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்கள், முட்டுக்காடு பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள்.