சுங்கச்சாவடி கட்டண வசூலால் ஆண்டுதோறும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.900 கோடி கூடுதல் செலவு

சுங்கச்சாவடி கட்டண வசூலால் ஆண்டுதோறும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.900 கோடி கூடுதல் செலவு
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடி களில் கட்டணம் வசூலிப்பதால் அரசு போக்குவரத்துக் கழகங் களுக்கு ஆண்டுதோறும் ரூ.900 கோடி கூடுதல் செலவாகிறது. எனவே தமிழக அரசே இந்த கட் டணத்தை ஏற்க முன்வர வேண்டு மென ஏஐடியுசி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏஐடியுசியின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் 8 போக்கு வரத்துக் கழகங்கள் சார்பில் மொத்தம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படு கின்றன. இவற்றில் தினமும் மொத்தம் 2.20 கோடி பேர் பயணம் செய்கின்றனர். டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கு கின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.6 கோடி அளவுக்கு நஷ்டத்தில் இருப்பதாக தணிக் கைக் குழு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர் களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் வழங்கப்படவில்லை. பிஎப் பணம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படவில்லை. சமீபத்தில் கொண்டுவரப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகை யும் முழுமையாக வழங்கப் படவில்லை.

ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை. இப்படி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை மட்டுமே ரூ.6 ஆயிரம் கோடி உள்ளது. இந்த தொகைகளை வழங்கக்கோரி தொழிற்சங்கங்கள் போராடியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிகட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு ஏற்க வேண்டும்

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டண வசூலால் மட்டுமே ஆண்டுக்கு ரூ.900 கோடி கூடுதல் செலவாகிறது. எனவே, லாபம் நோக்கமில்லாமல், சமூக பணியாற்றி வரும் போக்குவரத்துத் துறையை மீட்க இந்த கட்டணத்தை தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும். அல்லது இந்த கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in